தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு 1,028 நியாயவிலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தொகுப்பு தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 968 அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.