தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு வரை இருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பிற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகின்றது.2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.