Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பி விடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் தெருவாரியாக 250 பேருக்கு பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |