தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது இந்த
பொங்கல் சிறப்பு தொகுப்பு தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.13ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து நாளை முதல் ஜன.31ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வந்த பொங்கல் தொகுப்பில் பரிசுப்பணம் ரூ.2,500 வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அமைந்தது. இது குறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசு வழங்க முடியாமல் போனதற்கு அதிமுகவே காரணம் என்றும் மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.