தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையகத்தில் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், தெரு வாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பு ஆட்சியரை சாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்குவது பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் பரிசுத் தொகையுடன் 2500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.