Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. வீடு தேடி கொடுக்கப்படும் டோக்கன்கள்… இதெல்லாம் கிடைக்குமா….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. பொங்கல் பரிசு தொகுப்பாக  ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சுமார்  2,356 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பில் பல பொருட்களை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ம.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் பல்வேறு கட்சிகள் கரும்பு வழங்க வலியுறுத்தி வருகிறது. மேலும் தேங்காயும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வருகிற ஜனவரி 2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் ரொக்கப்பனம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து அதே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை  பொதுமக்களுக்கு வழங்க இருக்கிறார்.

அந்த வகையில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்களை பெறுவதற்காக டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.

Categories

Tech |