Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகை 5,௦௦௦ கொடுங்க”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்…!!!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்து  பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும். காமாலை உள்ளவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல பதவி சுகத்திற்காக சிலர் அங்கும் இங்கும் செல்வார்கள். ஆனால் அ.தி.மு.க கட்சியில்  உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணி அமையும் எனவும் பாராளுமன்ற தேர்தலிலும் 2024-ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால்  தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க  போன்றவை அதிருப்தியில் இருக்கிறது. அதனால் தி.மு.க கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய் விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |