தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகையை தமிழக அரசு வங்கியில் செலுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக நடந்த பணியில் 18,40,000 ரேஷன் அட்டைதாரர்கள் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் முழு விவரங்களையும் பெற்று வங்கிக் கணக்கை தொடங்கி இந்த மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிவில் சப்ளை துறை உத்தரவிட்டுள்ளது.