பொங்கல் பரிசு வழங்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன். அமைதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக 20 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதில் சிரமங்களை கையாள வேண்டும். ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக பொட்டலமிட்டு பிறகு இருபது பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பையில் வைத்து தைத்து முதன்மை சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும்.
மேலும் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பு ,அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக இறுதி ஜனவரி இறுதி வரை தற்காலிக எடையாளர்களை நியமிக்கவேண்டும். எனவே நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய், கூடுதல் கடைகளில் பணிபுரிவோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.