Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் பானையுடன் போராடிய பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானையுடன் கோவில் கருவறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படும் வரை இந்து சமய அறநிலை துறையின் சார்பில் பூசாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு விபூதி வழங்கியுள்ளனர். பின் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏராளமான பெண்கள் தாங்கள் வைத்த பொங்கலை நந்தி முன்பு படையல் செய்து சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |