தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து காலமுறை ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ரூபாய் 169.65 கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.