கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் வரை மின்சார ரயிலுக்கு தனி பாதை இருந்தாலும் அதன் பின் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் செல்ல வேண்டியிருப்பதால் தாமதம் தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு வரை தனிப்பாதை வேலைகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டதால் ஜனவரி 14 முதல் தனிப்பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.