தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கு மூலம் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் ஆதார இணைக்காதவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பலர் இன்னும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை. எனவே இதுவரை இணைக்காதவர்கள் அனைவரும் விரைவில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.