Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொங்கல் வச்சி கொண்டாட்டம்…. பங்குனி உத்திர திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் சொரிமுத்தையனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளன்று நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இதற்கிடையே கோவிலின் திருவிழாவிற்கு செல்வோர் அதே பகுதியிலிருக்கும் காரையாரின் அணைப் பகுதிக்கு சென்று இயற்கையின் அழகை கண்டுகளிப்பார்கள்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பொதுமக்கள் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |