தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது பண்டிகை காலம் என்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் விடுமுறையில் கடற்கரைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் கடற்கரைகள், நீர்நிலைகளுக்கு செல்லும் வழிகளை தடுப்புகள் வைத்து அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி மெரினா, பெசன்ட் நகர், கன்னியாகுமரி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Categories