Categories
மாநில செய்திகள்

பொங்கி வளரட்டும் சமத்துவ பொங்கல்… ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து…!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என கூறி திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அனைத்து மக்களும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பாக 2500 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொங்கல் தமிழ் பெருமை காத்திடும் விழா, மகிழ்ச்சி பொங்கிடும் விழா, வெற்றியின் விளைச்சலுக்கான தமிழர்களின் தனிப்பெரும் விழா என்று தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திருநாளை தமிழ் நாடெங்கும் சனாதன பிரிவினைகளை அகற்றி, சமூகநீதியை போற்றி, மத நல்லிணக்கம் பொங்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என்று ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

Categories

Tech |