பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரத்தில் மூன்று முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக இருக்கும். கவனமாக இருந்து மன அழுத்தத்தைக் குறைப்பதால் இது மாறிவிடும்.
இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தை இலை தைலம் ஆகியவற்றில் தெளிப்பது சிறந்தது. கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருந்து. வாரத்தில் மூன்று முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து, விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருக்கவும். அதன் பிறகு ஷாம்பு தேய்த்து தலைமுடியை அலசி வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் முடி உதிர்வு நின்று முடி செழித்து வளரும்.