Categories
தேசிய செய்திகள்

பொண்ணு பார்த்து… மண்டபம் பார்த்து… சொந்தக்காரங்க கூப்பிட்டு… “பிரியாணியோட தடபுடலாக நடந்த நாய்களின் திருமணம்…!!!

கேரளாவில் ஆன்லைனில் ஜோடி தேடி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது

கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் அருகே வசித்து வருகிறார் செல்வி. இவருக்கு அர்ஜுன் ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது வீட்டில் குட்டப்பு என்ற ஆண் நாயை வளர்த்து வருகின்றனர். ஒரு வயதான அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் பெண் நாய் ஒன்றை தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் ஆன்லைனில் பெண் நாயை தேடும்போது, கொச்சி அருகே ஒரு ஜான்வி என்ற பெண் நாய் இருப்பதாக தெரியவருகிறது. உடனே அங்கு சென்று அந்த நாயைப் பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருச்சூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் அனுமதியோடு உறவினர்கள் 50 பேருடன் குட்டப்புவுக்கும் ஜான்விக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு பிரியாணி விருந்தும் தடபுடலாக நடைபெற்றது. இது அப்பகுதியில் பெரிதும் பேசப்பட்டது.

Categories

Tech |