சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதும், மருத்துவ கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதுமாக உள்ளனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு அடைவதோடு மட்டுமல்லாமல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து வந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.