Categories
தேசிய செய்திகள்

பொதுஇடங்களில் தகனமேடை அமைப்பு…. 24 மணி நேரமும் சடலம் எரியூட்ட உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கே 24 மணி நேரமும் சடலங்களை எரியூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பசுமையாக பராமரிக்கப்படும் அழகிய பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள், காலி மைதானங்கள் ஆகியவற்றிலும் தகன மேடைகள் கட்டப்படுகின்றன.

Categories

Tech |