Categories
மாநில செய்திகள்

பொதுஇடத்தில் குப்பை கொட்டாதீங்க….! மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை….. இதுவரை அபராதம் எவ்வளவு தெரியுமா?….!!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகரை தூய்மையாக வைக்கவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 2-ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூபாய் 8,39,000 கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் பொது இடங்களில் விதி மீறி சுவரொட்டி ஒட்டிய 211 பேருக்கு 97 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் 15 லட்சத்து 63,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டியதாக சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய், அண்ணா நகரில் ரூ.1 லட்சத்து 800-ம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர பகுதியை தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |