அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போராடி வருகின்றனர். இபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையை போதுமானது எனவும் கருத்து போர் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு, மனு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனைத்து பொது குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வானகரத்தில் பொதுக்குழுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் கூடுதலாக க்யூ ஆர் கோடு குறியீடும் சேர்க்கப்பட்டுள்ளது .வேறு ஆட்கள் யாரும் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்ட சிலர் திட்டமிட்டனரா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.