Categories
தேசிய செய்திகள்

பொதுக்கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாப பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி…..!!!!!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது.

இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் எனவும் கூறினார்.

இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய்.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

Categories

Tech |