Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளராக இவர் தான் வர வேண்டும்”…. அதிமுகவின் எதிர்பார்ப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுகவில் ஒற்றை த் தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் கட்சியின் பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலனூர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். ஆனால் கட்சியை அபகரிக்க பார்க்கிறவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொது குழு கூட்டத்திற்கு எடப்பாடி தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. தற்போது கட்சி விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தில் கதவுகளையும் தட்டியும் உள்ளனர். இத்தகைய பரப்புகளுக்கு மத்தியில் போஸ்டர் யுத்தம், கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவற்றை பல்வேறு மாவட்டங்களில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அரங்கேற்றுக் கொண்டு இருக்கிறது.

அதன்படி திருச்சி மாநகரில் உள்ள தில்லைநகர் பகுதியில் செயலாளர் முஸ்தபா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார். இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர மாவட்ட அணி செயலாளர்கள், மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், தில்லை நகர் பகுதி வட்டச் செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒட்டுமொத்த அதிமுக கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு நினைவாக கூடிய வகையில் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி திமுக அரசுக்கு துணை போகும் விஷய கிருமிகள் மற்றும் கருப்பு ஆடுகளை வன்மையாக கண்டித்தனர்.

Categories

Tech |