தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 பேர் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன. இதனால் அந்த 6,49,467 மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.