Categories
மாநில செய்திகள்

பொதுத்துறை பணியிடங்கள் குரூப்4,2 தேர்வுகளுடன் சேர்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் உள்ள பணியிடங்கள் குரூப் 4, 2 தேர்வுகள் உடன் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பதவிகள் குரூப்-4 தேர்வுடன், உதவியாளர் அல்லது அதற்கு இணையான பதவிகள் ஊதிய நிலைக்கு ஏற்ப குரூப்-2 அல்லது குரூப் 2 ஏ தேர்வுடன் சேர்ப்பு, குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. இதன் மூலமாக காலிப்பணியிடங்கள் உயர வாய்ப்புள்ளது.

Categories

Tech |