தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழும் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை போன்றதொரு தொடர் மற்றும் கடினமான மதிப்பீட்டு முறையை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி வகுப்பு அளவில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. குறைந்தது நான்கு தேர்வுகள், 2 வகுப்பு அளவிலான தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.