தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. எனவே 10,12 வகுப்புகளின் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே ஈரோடு மாவட்டம் டிஎன் பாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். பின்பு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்னவென்றால் தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் நடத்துவது கட்சிக்காரர்கள் அனைவரும் கலந்து உரையாடி பேசிய பின்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதேபோல் ஆசிரியர்கள் மாணவர்களை தங்களின் பிள்ளைகள் போல் நினைத்து கல்வி கற்று தருகிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு எதுவும் இல்லை.
எனவே மாணவர்கள் தேர்வு எழுதும் அறையில் எத்தனை பேர் அமர்த்தவேண்டும் என்ற நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்பட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
அதனை அடுத்து தேர்தலுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்துவருகின்றது. பள்ளிக்கு வராதபு12வகுப்பு மாணவர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதலாம் என்றும் கூறுகிறார். அரசு பள்ளிகளில் அச்சுறுத்தல் பயமின்றி பள்ளி மாணவர்கள் 98% பள்ளிக்கு வருகின்றனர். பின்பு மாணவர்களின் சேர்க்கையும் கூடுதலாக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறுகின்றனர்.