Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம், மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாணவர்களுக்கு அனுமதி.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பொது ஆய்வக உதவியாளர் பணி அமர்த்திக் கொள்ள அனுமதி. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தளத்திலேயே தேர்வு எழுத வசதிகள், தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகள் கூடுதலாக அனுமதி. தேர்வு ஈடுசெய்ய நேரம், வினாத்தாள் வாசிப்பாளர், சொல்வதை எழுதுபவர், ஆய்வக உதவியாளர் நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |