பொதுத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மேலாண்மை கொள்கை மேம்படுத்தும் வகையில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை குழுக்களின் மறுகட்டமைப்பு செய்யவும் மேலாண்மை குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெற்றோர், ஆசிரியர் கழகங்களில் திமுகவில் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆறு முதல் ஒன்பதாம வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக தேர்வுகளில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில், எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிர விலை அதிகரிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் அந்த கோரிக்கைகள் தற்போது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவினர் உள்ள அரசியல் கட்சிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்