Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருசில பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு பொதுத்தேர்வானது  நடத்தப்பட்டது. ஆனால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதேபோன்று 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை.

இதன் காரணமாக மாணவர்களுக்கு அக மதிப்பெண் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனிடையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையின் போதும் அரசு பணிகளின் நியமனத்தில் போதும் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அரசு வழங்கிய மதிப்பெண்கள் வாயிலாக பல பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடும் என்று பலரும் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து 2021- 2022ம் கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொதுத்தேர்விற்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை போகும் அடிப்படையில், 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தபட இருப்பதாக அரசு அறிவித்தது. அந்த வகையில் பிப்ரவரி 9ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நிறைவடைந்தது. இதற்கிடையில் திருவண்ணாமலையில் 2 பள்ளிகளில் அரசு வழங்கிய திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருவண்ணாமலையின்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் குற்றச்சாட்டிக்குள்ளான இரு தனியார் பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையில் திருப்புதல் தேர்வு மாணவர்களை தயார்படுத்துவதற்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இதன் மதிப்பெண்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |