தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.
இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.