Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை அறிவிப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 10ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

இந்த நிலையில் கல்வி கட்டண நிலுவை காரணமாக சில தனியார் பள்ளிகளில் சம்பந்தபட்ட மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை வழங்க மறுக்கக்கூடாது. நுழைவு சீட்டு வழங்க மறுத்தால் முழுப்பொறுப்பையும் பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |