தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் சரிபார்த்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் உறுதி செய்யும்படி பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அவகாசம் கேட்டதால் தற்போது டிசம்பர் 12ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்களது விவரங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால் உடனே ஆசிரியர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.