Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வை முன்னிட்டு… பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு… செய்முறைத் தேர்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு 150 மையங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வுகள் தொடங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 252 பள்ளிகளில் பயிலும் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதனை முன்னிட்டு செய்முறை தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 150 மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக வடமதுரை, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 73 மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது.

வருகின்ற 20-ஆம் தேதி வரை இந்த மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் செய்முறை தேர்வு நத்தம் தாலுகா செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு உடல் வெப்பநிலை பரிசோதனை மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய ஆய்வக பொருட்களை தொடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே வருகிற 21-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை இரண்டாவது கட்டமாக 77 மையங்களில் செய்முறை தேர்வு நடக்கிறது. மேலும் மற்றொரு நாளில் கொரோனா பாதித்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

Categories

Tech |