தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இவர்களுக்கான பாடத்திட்டங்களும் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.