பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகை பெற விரும்புவோர் மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி காது கேளாதோர், பார்வைத்திறனற்றோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.