Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை… சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு… வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு…!!

பொதுமக்களின் கோரிக்கையின் படி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை அடித்துக் கொன்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் அருள் குமார் மற்றும் வன காப்பாளர்கள் மணிகண்டன், அகிலா, ஷர்மிளா, கிருஷ்ணசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த காலடி தடத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுத்தையால் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பரிசோதனை அனுப்பப்பட்ட காலடி தடங்கள் சிறுத்தையின் காலடி தடங்கல் என உறுதி செய்யப்பட்ட பின்பு அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பட்டு சிறுத்தையை பிடிப்பதர்க்கான கூண்டுகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |