Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த பன்றிகள்…. நகராட்சி பணியாளர்களின் செயல்….!!

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இரணியன் நகர், தென்பாதி, கற்பக நகர், சின்னத்தம்பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரனிடம் புகார் அளித்துள்ளனர்.

முதற்கட்டமாக நகராட்சி சார்பில் ஆணையர் ராஜகோபால் தலைமையில், சீர்காழி நகர்ப்பகுதியில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்றி உரிமையாளர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |