சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.