Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு இடையூறு…. 2 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சத்தியா நகரில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பூபதியும் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவரும் திரௌபதி அம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |