இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சிலிண்டர் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர்கள் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் எவ்வித அலைச்சலும் சிரமமும் இல்லாமல் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதனைப்போலவே வாகனங்களில் பயன்படுத்தப்படும் CNG எரிவாயுவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் சேவை தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை முதற்கட்டமாக மும்பையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை ஸ்டார்ட் அப் நிறுவனமான The Fuel Delivery வழங்குகிறது. அதற்காக மகநகர் கேஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை அனைத்து இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் சென்ற டெலிவரி செய்வதற்கு வசதியாக ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இந்த சேவைகள் வாரத்தின் ஏழு நாட்களும் இரவு பகல் முழுவதும் கிடைக்கும். ஆட்டோ ரிக்ஷா, கேப், வணிக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் டோர் டெலிவரி சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் நிரப்பக்கூடிய நிலையங்களில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இனி அந்த பிரச்சினை இருக்காது என்றும் வீட்டிலேயே கேஸ் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.