தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் 47ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் 70 நாட்களாக காலை 10 மணி – மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்துக்கு பிறகு வரும் ஜனவரியில் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. இதில் அரசு துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனம், நான்கு பிற மாநில அரசுகள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற உள்ளது.
இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட உள்ளது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், ராட்டினம் போன்ற சிறப்பம்சங்களும் இடம்பெற உள்ளது. இதில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.35, சிறுவர்களுக்கு ரூ.20, மாணவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.