இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தியாவின் தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரி நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . இதனால் இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. அதில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டிப்பாக பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக வைக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது. அனைவருக்கும் அவர்களது உயிர் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பமும் மிகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே அனைவரும் காரில் பயணிக்கும் போது அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். அப்படி அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்