Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றும் கடைகள்” மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அனைத்து மீன் கடைகளையும்  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் சமீரன் 3  குழுக்களை அமைத்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்த மீன் விற்பனை செய்யப்படுகிறதா? என  ஆய்வு செய்தனர். அதன்பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் சில கடைகளில் மீன்களில் எவ்வித ரசாயன பொருட்களும் கலக்கப்படவில்லை. மேலும் சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்காக விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த 26 கிலோ மீன்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |