Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களை பயமுறுத்திய முதலை… “18 நாட்களுக்குப் பிறகு வலையில் சிக்கியது”… வனத்துறையினர் நடவடிக்கை…!!!

பொதுமக்களை பயமுறுத்திய முதலை 18 தினங்களுக்கு பிறகு வலையில் சிக்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகில் வரதம்பட்டு கிராமத்தில் ஓமக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கடந்த 12ஆம் தேதி ஒரு முதலை பாலாற்றின் வழியாக வந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் குளத்திற்கு சென்று மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், மீன் வலைகளை விரித்தும், முதலையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் கடந்த 18 தினங்களாக வலையில் முதலை சிக்கவில்லை.

இந்நிலையில் 18 தினங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை அந்த முதலை வலையில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் ஒமகுளத்திற்கு சென்று பார்த்தார்கள். அப்போது வலையில் சுமார் 12 கிலோ எடையுடன் 2 1/2 நீளத்தில் பெண் முதலை சிக்கி இருந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த முதலையை பாதுகாப்பாக மீட்டு அணைக்கரை ஆற்றுக்கு கொண்டு பாதுகாப்பாக ஆற்றில் விட்டார்கள். பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்தார்கள்.

Categories

Tech |