Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு… 120 கண்காணிப்பு கேமராக்கள்…!!

குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளார்.

எனவே தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற சாலைகள், குடியிருப்புகள், கடைவீதிகள், பிரதான சாலைகள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பங்களிப்போடு மொத்தம் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி ஆகிய காவல் நிலையங்களில் கண்காணிக்கப்படும் என சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு வாரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என கூறியுள்ளார்.

Categories

Tech |