Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்… டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடியவர்கள்… மடக்கிப் பிடித்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு டிராக்டரில் தப்பியோடிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜசேகர், காசி, சிலம்பரசன், செல்வராஜன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கடந்த 11-ஆம் தேதி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அதனை கண்ட பொதுமக்கள் விளாம்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 4 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் டிராக்டரில் முன்னால் செல்லுமாறு கூறிவிட்டு, காவல்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். விளாம்பட்டி காவல்நிலையம் அருகில் வந்தபோது காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நான்கு பேரும் வேறு பாதையில் டிராக்டரை திருப்பித் தப்பினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தேடினர். இந்நிலையில் விளாம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ராஜசேகர், காசி, சிலம்பரசன், செல்வராஜன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |