ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 33 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அடுத்துள்ள வெங்கிட்டன் குறிச்சி விலக்கு சாலையில் பரமக்குடி தாசில்தார் தமிழ் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அண்ணா நகரை சேர்ந்த ராஜா(29) மற்றும் டிரைவர் வேந்தோணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் போகலூரில் இருந்து குமரக்குடிக்கு ரேஷன் அரிசிகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. இந்நிலையில் லாரியில் இருந்த 33 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்வம் குறித்து பரமக்குடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜா மற்றும் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.