சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கடைகளை நகராட்சியினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் உள்ள 30-வது வார்டு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் மற்றும் கடைகள் கட்டியுள்ளதாக பொதுமக்கள் வெகு நாட்களாக புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் நகர தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், ஆணையாளர் சகிலா, நகராட்சி என்ஜினீயர் செல்வராணி மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்த இடங்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் பணியாளர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கடைகளை அகற்றினர். இதனைதொடர்ந்து சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.